நாடாளுமன்றத்தின் முன் 7000 ஷூக்களுடன் நூதன போராட்டம்

  Shalini Chandra Sekar   | Last Modified : 14 Mar, 2018 07:52 pm


அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் திரண்டு வந்து துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப் படுத்த வேண்டுமென போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அவாஸ் எனும் அமைப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் வாசலில் 7000 ஷூக்களை வைத்து ஒரு வித்தியாசமான போராட்டத்தை நடத்தியிருக்கிறது. 2012ஆம் ஆண்டு சாண்டி ஹூக் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருந்து புளோரிடா துப்பாக்கிச்சூடு வரையிலான படுகொலையில் கிட்டத்தட்ட 7000 பேர் இறந்துள்ளனர். அவர்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த எண்ணிக்கையிலான ஷூக்களை வைத்ததாக அந்த அவாஸ் அமைப்பு கூறியுள்ளது. மேலும் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தத் தக்க நடவடிக்கை எடுக்கவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close