அமெரிக்கா: பாதசாரிகளுக்கான பாலம் இடிந்து விழுந்தது; 4 பேர் பலி

  SRK   | Last Modified : 16 Mar, 2018 09:37 am


அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில், பாதசாரிகளுக்கான பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ப்ளோரிடா மாகாணத்தின் தலைநகர் மயாமியில் உள்ளது ப்ளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம். அதன் அருகே, பாதசாரிகளுக்கான பாலம் ஒன்று புதிதாக கட்டிமுடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென இந்த பாலம் இடிந்து விழுந்தது. 8 வழி சாலைக்கு மேல் இந்த பாலம் செல்வதனால், அது இடிந்து, சாலையில் சென்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மேல் விழுந்தது.  இதில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். 

மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், மீட்புப் படையினர் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close