ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரவிருக்கும் பிரான்ஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Mar, 2018 07:36 pm


செயலிகளை (apps) உருவாக்கும் பொறியாளர்களை ஏமாற்றும் விதத்தில் வர்த்தகம் செய்வதாக ஆப்பிள் மற்றும் கூகுள் மீது பாரீஸின் வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாக பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் ப்ருனோ லே மெய்ர் தெரிவித்துள்ளார். 

செயலிகளை (apps) உருவாக்குபவர்கள் அவற்றை ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு விற்பனை செய்யும்போது அப்ளிகேஷனின் தரவுகள்(data) சேகரிக்கப்படும் என்றும்,  இருவரும் இந்த விதிமுறைகளுக்கு ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தங்களில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்றும் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிதியமைச்சர் ப்ருனோ லே மெய்ர் தெரிவித்துள்ளார். பெரிய நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் எங்கள் பயன்பாட்டின் டெவலப்பர்களை இப்படி நடத்தக்கூடாது என்று ப்ருனோ தெரிவித்துள்ளார். இதற்காக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள்மீது பல மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் துருப்பிடிக்காத எஃகின் மீது 25 சதவிகிதமும் இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்தின்மீது 10 சதவிகிதமும் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close