பார்சல் வெடி குண்டுகளால் அதிர்ந்து கிடக்கும் அமெரிக்கா

  SRK   | Last Modified : 21 Mar, 2018 10:26 am


அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் தொடர்ந்து பார்சல் குண்டு சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. நேற்று இரண்டு இடங்களில் பார்சல் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

நேற்று அதிகாலை டெக்சஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகருக்கு அருகே உள்ள ஃபெட்எக்ஸ் கொரியர் நிறுவன கட்டிடத்தில், பார்சல் ஒன்று வெடித்தது. அதற்குள் ஆணி மற்றும் கூரான இரும்பு பொருட்கள் நிறைந்திருந்ததாக தெரிகிறது. இதில் ஒரு பெண் ஊழியர் காயமடைந்தார். 

அதேபோல, நேற்று மாலை ஒரு பார்சலில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். 

ஏற்கனவே கடந்த சில வாரங்களில் டெக்சஸ் மாகாணத்தில் 4 பார்சல் குண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதுவரை இதுபோன்ற சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நேற்று நடந்த 2 வெடிகுண்டு சம்பவங்களும், இதற்கு முன் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு தொடர்புள்ளதாக தெரிவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close