இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை!

  Sujatha   | Last Modified : 26 Mar, 2018 06:19 am


இந்தோனேசியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் வானிலை மைய (USGS) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் உள்ள சாம்லகி பகுதியின் வடமேற்கே கடல் பகுதியை ஒட்டி  சுமார் 222 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close