எச்-1பி விசா பெற இன்று முதல் விண்ணப்பம்

  முத்துமாரி   | Last Modified : 02 Apr, 2018 02:00 pm


2019ம் ஆண்டுக்கான அமெரிக்காவின்  எச்-1பி விசாவுக்கு இன்று முதல் விண்ணப்பம் பெறப்படுகிறது.

அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்கு வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப் விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளார். இந்த விதிமுறையை தளர்த்தும்படி அமெரிக்காவுடன் இந்தியா பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிலையிலும் விசா விதிமுறைகளை தளர்த்துவதில் அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனையடுத்து 2019ம் ஆண்டிற்கான விண்ணப்பம் ஏப்ரல் 2ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா குடியுரிமைத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று(ஏப்ரல்.2) முதல் கடுமையான விதிமுறைகளுடன் கூடிய எச்-1பி விசா விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் கட்டணம் செலுத்தி, பிரீமியம் எச்1பி விசா பெறும் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த தடை செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close