சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் 139 பாகிஸ்தானியர்கள் சேர்ப்பு

Last Modified : 05 Apr, 2018 01:36 am


ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அளவில் செயல்படும் தீவிரவாதிகளின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 139 பாகிஸ்தான் நாட்டவர்களின் பெயர்கள் உள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், ஆபத்தான தீவிரவாதிகளை பட்டியலிட்டு வருகிறது. சமீப காலமாக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாக அமெரிக்க அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், பல ஆபத்தான அமைப்புகளை கண்டறிந்து தடை செய்தும் வருகிறது.

சர்வதேச அளவிலான தீவிரவாதிகள் பட்டியலில் சில பெயர்களை சேர்த்து வெளியிட்டுள்ளது ஐநா. அதில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 139 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஹபீஸ் சயீத், தாவூத் இப்ராஹிம், ஹக்கானி குடும்பத்தினர் உள்ளிட்டோரும் அடங்குவர். 

இந்த பட்டியலில் முதலிடத்தில் ஒசாமாவின் முன்னாள் கூட்டாளி ஸவாஹிரி உள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close