தொடரும் சிரியா தாக்குதல்; குழந்தைகள் உள்பட 27 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 07 Apr, 2018 10:55 am


சிரியாவில் நேற்று நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உள்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யாவின் உதவியுடன் சிரியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர்  இதுவரை பலியாகியுள்ளனர். கடந்த மாத தொடக்கத்தில் சுமார் 120க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டது உலகத்தையே உலுக்கியது. அனைத்து உங்க நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. 

தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியின் 'டவுமா' நகரில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ராணுவத்தினர் வான்வழி தாக்குதலை நடத்தினர். 

இந்த வான்வழித் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உள்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close