புகைமண்டலமாக காட்சியளிக்கும் சிரியா; அமெரிக்கப் படைகள் தொடர் தாக்குதல்

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2018 08:35 am


சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருவதால் சிரியா புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. 

சிரிய அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதங்களில்  நடைபெற்ற தாக்குதலில் கூட நூற்றுக்கணக்கான குழந்தைகள் உள்பட பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் கிளர்ச்சியாளர்களை தாக்கும் பொருட்டு சிரிய அரசு பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியதில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.

மேலும், சிரிய அதிபரின் அல் அசாத் இந்த தாக்குதலில் ரஷ்யாவின் உதவியுடன் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதால் அதற்கு எதிராக கண்டிப்பாக சிரியாவின் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் பகுதியில் அமெரிக்கா, பிரிட்டன் படைகள் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close