இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2018 05:38 pm


இந்தோனேசியாவில் இன்று காலை 5.3 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் சாம்லகி என்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகள் என பதிவாகியுள்ளது. சாம்லகி பகுதியில் இருந்து வடமேற்கே 226 கி.மீ  தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் 163.29 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. சாம்லகி பகுதியின் 100 கிமீ சுற்றளவில் சுமார் 500 மக்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நில அதிர்வை உணர்ந்த அப்பகுதி மக்கள்  தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 5.3 ரிக்டர் என்பதால் மிதமான நிலநடுக்கம் தான் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close