ஒரே ஒரு வாழைப்பழத்தின் விலை 86 ஆயிரம் ரூபாய்!

  Padmapriya   | Last Modified : 19 Apr, 2018 06:34 pm

இங்கிலாந்தின் நாட்டிங்காமில் வசித்து வந்த பார்பி கார்டன் என்ற பெண் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஆன்லைன் மூலம் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதில் பொருட்களுக்கான பணத்தை கிரடிட் கார்ட் மூலம் செலுத்தியுள்ளார்.

பொருட்கள் வீட்டுக்கு வந்தவுடன், அனைத்தின் விலையையும் சரி பார்த்துள்ளார். வாழைப்பழத்தின் விலையை பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில், பழத்தின் விலையாக இந்திய மதிப்பில் 86 ஆயிரம் (£930.11) என போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பெண் தனது கிரடிட் கார்டில் மோசடி நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில், மார்க்கெட்டை தொடர்பு கொண்டபோது, கணனியில் ஏற்பட்ட கோளாறு என்றும் வாழைப்பழத்திற்கான உரிய விலை மட்டுமே எடுத்துள்ளோம் என விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த தவறினை எங்களுக்கு சுட்டிகாட்டியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இனிமேல், இப்படி ஒரு தவறு நடக்காது என சூப்பர்மார்க்கெட் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது பிரச்னை முடிவுக்கு வந்தது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close