அணு ஆயுத சோதனை இல்லை; வடகொரிய அதிபரின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் டிரம்ப்

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2018 09:17 am


அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் எதுவும் இனி நடைபெறாது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இன்று அறிவித்துள்ளார்.

அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உலகையே அதிர வைத்த வடகொரியாவுக்கு சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. பல்வேறு கண்டனங்களை தெரிவித்தது. இருந்தும் தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால் வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தன.


இந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்தையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்து வருகின்றன. 

இதனையடுத்து, அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அதிபர் தெரிவித்துள்ளார். சோதனையை நிறுத்துவது மட்டுமல்லாமல் அணு ஆயுத சோதனை தளத்தை மூடவுள்ளதாகவும் அதிபர் இன்று அறிவித்துள்ளார்.


வடகொரியாவினால் பெரும் போர் ஏற்படுமோ என அச்சத்தில் இருந்த உலக நாடுகள் கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியில் உள்ளன. உலக நாடுகள் வரலாற்றில் வடகொரிய அதிபரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படும் என தெரிகிறது. 

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்ததோடு, இந்த அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டுமின்றி உலக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close