அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வந்த முதல் 11 நாள் கைக்குழந்தை!

  Padmapriya   | Last Modified : 21 Apr, 2018 05:24 pm

அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் வாக்கெடுப்பின் போது சபைக்குள் பிறந்து 11 நாட்களே ஆன கைக்குழந்தை நுழைந்து முதல் முறையாக அவைக்குள் வந்த முதல் சிறிய குழந்தை என்ற பெயரை பெற்றுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் புதிய தலைவராக ப்ரிடென்ஸ்டைன் என்பவரை அதிபர் டிரம்ப் நியமித்தார். அவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஆதரவு முக்கியம் என்பதால், இதற்காக செனட் சபையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வாக்கெடுப்பு நடந்தது. 

இதில் இல்லினாய்ஸ் மாகாண ஜனநாயக கட்சி செனட் உறுப்பினரான டாம்மி டக்வொர்த், பிறந்து 11 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் வாக்கெடுப்புக்கு வந்தார். வாக்கெடுப்பின் போது உறுப்பினர்கள் தங்களது குழந்தைகளை சபைக்கு அழைத்து வருவது தொடர்பான விதி கடந்த புதன்கிழமை திருத்தப்பட்டது.

இதன்மூலம், வாக்கெடுப்பின் போது செனட் சபைக்குள் நுழைந்த முதல் குழந்தை என்ற சாதனையை டாம்மி டக்வொர்த்தின் குழந்தை பெற்றுள்ளது. ராணுவ வீராங்கணையான டாம்மி டக்வொர்த் ஈராக் போரின் போது தனது இரு கால்களையும் இழந்தவர் ஆவார். 

வாக்கெடுப்பின் முடிவில் 50 உறுப்பினர்கள் ஆதரவு, 49 உறுப்பினர்கள் எதிர்ப்பு என்ற நூலிலை வித்தியாசத்தில் ப்ரிடென்ஸ்டைன் நாசா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டதாக மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close