அதீத ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு மனசோர்வை உண்டாக்கும்

  Padmapriya   | Last Modified : 22 Apr, 2018 03:24 pm

ஸ்மார்ட்போனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் மனசோர்வு, பதற்றம் மற்றும் தனிமை உணர்வும் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் ஸ்மார்ட்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தேவைக்காக தொலைப்பேசி என்று இருந்த நிலையில், ஸ்மார்ட்போன் காலகட்டம் அதனை கட்டாய உபகரணமாகவே மாற்றிவிட்டது. அதன் ஈர்ப்பிலிருந்து வெளிவராமல் பிரச்னையில் சிக்கித் தவிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் பாதிக்கப்பட்டதை உணராதவர்களாகவே பெரும்பாலானோர் இருப்பர். 

தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு நாட்டிலும் சுமார் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்பாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தின் 135 மாணவர்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அந்த பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்வி பேராசிரியர் எரிக் பெப்பர், இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி நடத்திய இந்த ஆராய்ச்சியில், மிக அதிக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிற மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும், பதற்றத்துக்கும் ஆளாவது தெரிய வந்துள்ளது.

வலி தாங்க முடியாமல் வலி நிவாரணிகளை எடுத்து, அதற்கு அடிமையாகி விடுவதுபோல, ஒரு கட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அதற்கு அடிமையாகி விடுவதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தனிமை உணர்வுக்கு தள்ளப்படுவதற்கு காரணம், அவர்கள் சக மனிதர்களிடம் முகம் பார்த்து பேசாமல் போய்விடுவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே நமக்கு உபயோகமாக இருக்கும் ஸ்மார்ட்போன் கருவியை தேவைக் கருதி பயன்படுத்தி, பின் தூற வைத்து உயிரோட்டமுள்ள விஷயங்களில் நாட்டம் காட்டுவதே பல அபாயங்கள்லிருந்து நம்மை தப்பிக்க செய்யும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close