அச்சுறுத்தப்படும் இந்திய ஊடகங்கள்: அமெரிக்க ஆய்வறிக்கை

  Padmapriya   | Last Modified : 22 Apr, 2018 07:12 pm

இந்தியாவில் அரசை விமர்சிக்கும் ஊடகங்கள் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவுதுறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா நாடாளுமன்றில் மனித உரிமை மீறல் தொடர்பான ஆய்வறிக்கையை அந்நாட்டு வெளியுறவு துறை தாக்கல் செய்துள்ளது. இதில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நிலவிய நெருக்கடி நிலைக்கு பிறகு, சமீப காலமாக அதேபோல அரசை விமர்சிக்கும் ஊடகங்கள் இந்தியாவில் அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 54 பேர் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 45 பேர் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், அரசை விமர்சித்த 3 செய்தி தொலைக்காட்சிகளும், 45 வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு எதிராக தேசவிரோதம் மற்றும் அவமதிப்பு வழக்குகள் தொடரப்படுவதாகவும் அதில் இந்திய ஊடகங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close