எனது நிர்வாகத்துக்கு ஏ+ சான்று தான்: புகழ்ந்து கொண்ட ட்ரம்ப்

  Padmapriya   | Last Modified : 27 Apr, 2018 06:35 pm

தனது நிர்வாகத் திறனுக்கு தரமதிப்பீடு அளிக்க வேண்டுமென்றால், ஏ+ சான்று தான் வழங்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சியின் ஃபாக்ஸ் அண்டு ஃப்ரண்ட்ஸ் நிகழ்ச்சியில் தொலைபேசி வாயிலாக ட்ரம்ப் பேசினார்.

அப்போது அவர், தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தபோதிலும், அவற்றை முறியடித்து திறம்படச் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் அவரால் செய்ய முடிந்த விஷயங்களை வேறு எவருமே இதுவரை செய்து காட்டியதில்லை என்றும் தனது நிர்வாக ஆற்றலுக்கு ஏ+ தரச்சான்று அளிக்கலாம் எனவும் பேசினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close