102 வயதில் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட மூதாட்டி

  Newstm Desk   | Last Modified : 02 May, 2018 11:34 am

102 வயது  ஐடா கீலிங் என்ற மூதாட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற முதியவர்களுக்கான ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.

67 வயது வரை எந்த ஒரு உடற்பயிற்சியோ, ஓட்டப் பந்தயத்திலோ பங்கேற்காத ஐடா கீலிங், தன் மகன்களை இழந்த துயரத்திலிருந்து வெளிவர முடிவு செய்து, தடகள பயிற்சியாளரான தனது மகளிடம் தடகள பயிற்சி பெற்றுள்ளார்.

67 வயதில் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கிய ஐடா,  95 முதல் 99 வயது வரை உள்ள அனைத்து ஓட்டப் பந்தய பிரிவுகளிலும் பங்கேற்று சாதனை படைத்தார். மேலும், தனது 95 வயதின் போது, 60 மீட்டர் தூரத்தை 29.86 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது 102வது வயதில் பங்கேற்று மீண்டும் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 100 வயதை கடந்த பின்பும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட முதல் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். இவர் தனது வாழ்க்கை பயணம் குறித்து  'Can't Nothing Bring Me Down'  என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close