கணவர் பாஸ்போர்ட்டில் இந்தியா வந்த பெண்!

  Newstm Desk   | Last Modified : 03 May, 2018 12:50 pm

இந்திய வம்சாவழி பெண் ஒருவர் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு தனது கணவரின் பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளார். இதை பிரிட்டன் அதிகாரிகள் கவனிக்கத் தவறியதால் இந்தியாவுக்குள் நுழைய முடியாமல் அவர் அவதிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் மென்செஸ்டர் பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் இந்திய வம்சாவழி பெண் கீதா மோதா. இவர் கடந்த 23ந்தேதி பிரிட்டனில் இருந்து தனது கணவரின் பாஸ்போர்ட்டை தவறுதலாக எடுத்துக்கொண்டு இந்தியா வந்துள்ளார். அவர் கொண்டு வந்தது அவருடைய பாஸ்போர்ட் இல்லை என்பதை லண்டன் விமான நிலைய அதிகாரிகள் கவனிக்கவில்லை.

இந்தியா வந்தததும் அவரது பாஸ்போர்ட்டை சரி பார்த்த அதிகாரிகள், பாஸ்போர்ட் மாறியிருப்பதை கண்டு அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால், கீதா துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டார். பிரிட்டனில் இருந்து தனது பாஸ்போர்ட் வரும் வரை அவர் துபாயில்தான் இருந்தார். பின்னர், பாஸ்போர்ட் கைக்கு வந்ததும் இந்தியாவுக்கு வந்தார். 

இதுகுறித்து கீதா கூறுகையில், "இது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் சரியாக சோதனை செய்திருக்க வேண்டும்" என்றார்.

கீதா செய்தது தவறு என்றாலும், பாஸ்போர்ட்டை சரியாக பார்க்காமல் விமான பயணத்துக்கு அனுமதித்ததற்காக விமான நிலைய நிறுவனமும் மன்னிப்பு கேட்டுள்ளது. மிகவும் பெருந்தன்மையாக,  "இது கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனம், இதற்காக கீதாவிடம் மன்னிப்பு கேட்பதாகவும்" தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close