ஈரான் விவகாரம்: மோடியிடம் பேசினார் இஸ்ரேல் பிரதமர்

Last Modified : 06 May, 2018 11:12 am

பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதில் ஈரான் ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015–ம் ஆண்டு வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம், அந்த நாடு அணு ஆயுத திட்டங்களை நிறுத்தவும், அதற்கு பிரதிபலனாக மேற்கத்திய நாடுகள் அதன் மீதான பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கவும் வகை செய்கிறது.

ஆனால், அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயல்பட்டதாகவும் இது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கடந்த வாரம் அதிரடி தகவல் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக வரும் 12–ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். இந்த விவகாரத்த்தில் அமெரிக்கா ஈரானுடன் மோதல் போக்கையே கடைபிடிக்கிறது. அதோடு, இஸ்ரேல் பிரதமர் ஈரானுக்கு எதிராக ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு,  பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் மார்‌ஷல், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோருடனும் அவர் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

அப்போது ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு உடன்பாட்டை மீறி செயல்பட்டு வருவதாக இவர்களிடம் நெதன்யாஹு குற்றம்சாட்டினார். அது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்த தகவலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் ஊடக ஆலோசகர் தகவல் வெளியிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close