ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசியவர் ஈராக் தேர்தலில் போட்டி

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 02:13 pm

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் மீது ஷூ வீசிய பத்திரிகையாளர் ஈராக் பாராளுமன்ற தேர்தலில் அல்-ஸைதி போட்டியிட உள்ளார்.

அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம்  தனது கடைசி பயணமாக ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். பாக்தாத் நகரில் ஈராக் அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து புஷ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஈராக்கிய பத்திரிகையாளர் மண்டேசர் அல்-ஸைதி திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி புஷ்ஷை குறிவைத்து வீசினார்.

புஷ் கீழே குனிந்து தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் அப்போது உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. ஈராக்கில் நடக்கும் எல்லா சீரழிவுக்கும் புஷ்தான் காரணம் என்பதால் ஷூவை வீசினேன் என அல்-ஸைதி தெரிவித்திருந்தார். எனினும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நன்னடத்தை காரணமாக 9 மாதங்களில் அல்-ஸைதி விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர், அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது. இந்நிலையில், வரும் 12-ம் தேதி நடக்க உள்ள ஈராக் பாராளுமன்ற தேர்தலில் அல்-ஸைதி போட்டியிட உள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close