ஹவாய் தீவில் எரிமலை வெடிப்பு, அதிபயங்கர நிலநடுக்கம்...அச்சத்தில் மக்கள்!

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 08:29 pm


அமெரிக்காவின் ஹவாய் தீவில் எரிமலை வெடிப்பை அடுத்து அடுக்கடுக்கான இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் நேற்று முன்தினம் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி பெரும்பாலான மக்கள் வெளியேறினர். இதைதொடர்ந்து நேற்று மோசமான நிலையில் எரிமலைக்குழம்பு வெளியானது. எரிமலை சீற்றம் அதிகமாக இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்னும் தீவிர எரிமலை சீற்றம் நிகழலாம் என மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சில அப்பகுதியில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 


இதனையடுத்து நேற்று இரண்டு முறை ஹவாய் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் சரியாக 5.6 ரிக்டர் அளவிலும், அடுத்த அரை மணி நேரத்தில் 7.2 ரிக்டர் என்ற அளவில் ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமாகின. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு தற்போது அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close