உலகின் வயதான பிரதமர்: மலேசிய தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி

  Newstm Desk   | Last Modified : 10 May, 2018 08:26 am

மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அபார வெற்றி அடைந்தது.

மலேசிய பாராளுமன்றத்தின் 222 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பின்.என். கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

நேற்று இரவு நடந்த வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மகாதிர் முகம்மது இருவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்னும் நிலையில் இந்த தேர்தலில் மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றுகிறது என தெரிவித்தனர்.

பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து 1857ம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்ற  பிறகு, பாரிசன் நேஷ்னல் தலைமையிலான தேசிய கூட்டணி முதல் முறையாக ஆட்சியை இழந்துள்ளது. 61 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

92 வயது மகாதீர் முகமது இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை பெறவுள்ளார். இவர் முன்னரே 1981ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close