3 அமெரிக்க கைதிகளை விடுவித்தது வட கொரியா!

Last Modified : 10 May, 2018 12:05 pm

வட கொரியாவில் கைது செய்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்கள் மூன்று பேரை வட கொரியா விடுவித்தது. இவர்களை அழைத்து வர அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ வட கொரியா புறப்பட்டார். 

விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவு ஒன்றில், "வட கொரியா சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ அங்கு விடுவிக்கப்பட்ட மூவருடன் விமானத்தில் வந்துகொண்டிருக்கின்றனர்" என்று பதிவிட்டார். 

மேலும், ஆண்டுரூஸ் விமானப் படைத் தளத்தில் வந்து சேரும்போது அவர்களை நேரில் சென்று வரவேற்க இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட மூன்று கைதிகளில் ஒருவர் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். மற்ற இருவரும் ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருப்பவர்கள். இவர்கள் அரசியல் ரீதியிலாக கைது செய்யபட்டதாகவும் மனித உரிமை மீறல் என்றும் கண்டனங்கள் எழுந்தன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close