ஜூன் 12ம் தேதி ட்ரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு

  Newstm Desk   | Last Modified : 10 May, 2018 09:09 pm


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரும் ஜூன் மாதம் 12ம் தேதி வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் உன்னை சந்திக்கவுள்ளார். 

அணு ஆயுத தயாரிப்பு, ஏவுகணை உற்பத்தி என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வடகொரியா, கடந்த சில மாதங்களில், தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் இணைக்கமான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் மூலம், சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட வடகொரியா, பின்னர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டது.

இதற்கு ட்ரம்ப் அரசும் ஒப்புதல் அளித்தது. உலகமே சர்ச்சைக்குரிய முறையில் பொதுமேடையில் முட்டிக்கொண்டு இரு தலைவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த சந்திப்பு பற்றிய கடைசி கட்ட விவரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. வட - தென் கொரிய எல்லையில், பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என கூறப்பட்ட நிலையில், அதை ட்ரம்ப் சமீபத்தில் மறுத்தார். இந்நிலையில்,  ஜூன் மாதம் 12ம் தேதி இந்த சந்திப்பு நடைபெறும் என்றும், சந்திப்புக்கான இடமாக, சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close