ஈரானுடனான வணிக நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை; பிரான்ஸ் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 09:39 am


ஈரானுடன் வணிகத்தொடர்பு கொண்டுள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதை பிரான்ஸ் கடுமையாக கண்டித்துள்ளது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், ஈரானுடன் வர்த்தகம் வைத்துள்ள நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. எண்ணெய் மற்றும் கார் நிறுவனங்கள் பலவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானுடன் வணிக ஒப்பந்தகள் மேற்கொண்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் நவம்பர் மாதத்துடன் அவற்றை முடித்துக்கொள்ள வேண்டும். அதோடு ஈரானுடன் புதிய ஒப்பந்தங்களும் எதுவும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது மற்ற ஐரோப்பிய நாடுகளிடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரான்ஸ் அமெரிக்காவின் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளது. அதன்படி, 'அமெரிக்கா கூறியதை ஐரோப்பிய நிறுவனங்கள் ஏற்க வேண்டிய அவசியமில்லை. இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்த முறிவையும், வர்த்தகத்தையும் ஒப்பிடக்கூடாது. எனவே நிறுவனங்கள் ஈரானுடன் தங்களது வர்த்தகத்தை தொடர வேண்டும்" என தெரிவித்துள்ளது. 

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை கண்டித்து ஈரானில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவை மோசமாக விமர்சிக்கும் வாசகங்கள் கொண்ட பதாகைகளை வைத்து அவர்கள் டிரம்ப்-க்கு எதிராக முழக்கமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close