ஜெருசலேமில் சர்ச்சைக்குரிய அமெரிக்க தூதரகம் திறப்பு; கலவரங்களில் 55 பேர் பலி

  SRK   | Last Modified : 15 May, 2018 04:04 am


அமெரிக்க தூதரகம் ஜெருசலேமில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கு எதிராக காஸாவில் ஏற்பட்ட கலவரங்களில் 55 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் அமெரிக்க தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேமில் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான பிரச்னையில் முக்கிய பங்கு வகிக்கும் ஜெருசலேம் நகரை, பல உலக நாடுகள் இரு தரப்பும் சொந்தமானதாக அங்கீகரிக்காமல் இருந்தது. 

இரண்டு தரப்புக்குமே ஜெருசலேம் முக்கிய புனித நகரம் என்பதால், அதை இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இதுவரை, எந்த அமெரிக்க அதிபரோ, பெரிய நாடுகளின் தலைவர்களோ ஜெருசலேமில் தங்களது தூதரத்தை திறக்க மறுத்து வந்தனர். ஆனால், கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க ட்ரம்ப், ஜெருசலேமில் அமெரிக்க தூதரகத்தை திறப்பதாக அறிவித்தார். இது ஜெருசலேமை இஸ்ரேலுக்கு சொந்தமானதாக அங்கீகரிக்கும் செயல் என்பதால், அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை இந்த முடிவு முற்றிலும் சீர்குலைக்கும். 

அமெரிக்க ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பல்வேறு தரப்பினரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை மீறி தூதரகம் திறக்கப்பட்டுள்ளது. தூதரகத்தின் திறப்பு விழாவிற்கு, அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவான்கா வந்திருந்தார். திறப்பு விழாவையொட்டி, பல போராட்டங்கள் நடந்தன. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீனம் மற்றும் காஸாவில் பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்கள் எல்லையின் அருகே வன்முறையாக மாற, இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. நேற்று மட்டும் இந்த துப்பாக்கிச் சூடுகளில் 55 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 2,400 பேர் காயமடைந்தனர். 

அமெரிக்காவின் இந்த தூதரக முடிவுக்கு, மற்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் கூட்டணி நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close