அமெரிக்காவில் ரூ.400 கோடி மோசடி: இந்திய வம்சாவளி இளைஞர் கைவரிசை

Last Modified : 15 May, 2018 03:08 pm

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞர், கிரிப்டோகரன்சி நிறுவனம் தொடங்கி, முதலீட்டாளர்களிடம் ரூ.400 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோக்ரப் ஷர்மா (27) தனது நண்பர்களுடன் இணைந்து கிரிப்டோகரன்சி நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் பல வாடிக்கையாளர்களை கிரிப்டோகரன்சி திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய வைத்துள்ளனர். கிரிப்டோகரன்சி  என்பது ட்ஜிட்டல் முறையில் முதலீடு செய்வது. அதாவது பிட்காயின் என்பது போலானது.

டிஜிட்டலாக உருவாக்கப்பட்டு, டிஜிட்டலாகப் புழக்கத்தில் விடப்படும் கர்ன்சி. அமெரிக்காவில் இத்தகைய முதலீடு அதிகளவில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 60 மில்லியன் டாலர்( இந்திய மதிப்புக்கு 405 கோடி ரூபாய்) முதலீடாக பெற்றுள்ளனர் சோக்ரப் ஷர்மா மற்றும் அவரது நண்பர்கள். 

இந்த நிலையில், முறையான அனுமதியின்றி, வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த டிஜிட்டல் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு 65 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close