ஒன்றிரண்டு ஆண்டுகள் தான் ஆட்சியில் இருப்பேன்: மலேசிய பிரதமர்

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 03:24 pm

இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் தான் ஆட்சியில் இருப்பேன் என்று மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

மலேசிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 92 வயது நிரம்பிய மஹாதிர் முகமது மலேசியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதன்முலம், உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

இந்நிலையில், டோக்கியோவில் நடந்த கருத்தரங்கில் பேசிய அவர், இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலம் மட்டுமே மலேசிய பிரதமராக பதவி வகிப்பேன். பிரதமர் பதவியை விட்டு கீழே இறங்கினாலும், மலேசிய அரசின் பின்னல் இருந்து முக்கிய பங்காற்றுவேன். 

தான் பிரதமராக தொடர்ந்தாலும், விரைவில் சிறையிலிருந்து வெளிவர உள்ள அன்வர் இப்ராஹிம் கூட்டணி கட்சிகளின் தலைவராக தொடர்வார் என அவர் தெரிவித்துள்ளார். 

தனது தேர்தல் பிரசாரத்தின் போது, அன்வர் இப்ராஹிம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பிரதமராக்கப்படுவார் என மஹாதிர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அன்வர் இப்ராஹிமின் மனைவி தற்போது மலேசியா துணை பிரதமராக உள்ளார் என்பதும் நினைவு கூறத்தக்கது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close