ஹவாய் தீவில் எரிமலை சீற்றம்; கரும்புகை வெளியேற்றத்தால் விமானம் செல்ல எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 10:58 am


அமெரிக்காவின் ஹவாய் தீவில் எரிமலை வெடிப்பினால் தொடர்ந்து கரும்புகை வெளியேறுவதால் அப்பகுதியில் வான்வழி போக்குவரத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் கடந்த சில வாரங்களாக  எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்பினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே அப்பகுதியில் தொடர்ந்து 3 முறை நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிமலை சீற்றம் அதிகரித்து அதிக அளவிலான லாவா குழம்பு வெளியேறுகிறது. சுமார் 12 ஆயிரம் அடி உயரத்திற்கு கரும்புகையும் வெளிவருகிறது. 


இதையடுத்து, நேற்று மிகவும் மோசமான நிலையில் எரிமலைக்குழம்பு வெளியானதை அடுத்து, அடுத்த சில நாட்களுக்கு எரிமலை சீற்றம் இதை விட அதிகமாக இருக்கும் என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதி வழியாக செல்லும் வான்வழிப் போக்குவரத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் விமானங்கள் அப்பகுதி வழியாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close