விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றம்

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 06:49 am


அமெரிக்காவில் விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றப்படும் திட்டத்தை சோதனை செய்தது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார்சியா என்பவர் தனது காதலியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கொள்ளையர்களால் கார்சியா சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கார்சியாவின் காதலிக்கு இந்த கொலையில் சம்பந்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான கேஸ்டில்லோ உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் கார்சியாவை சுட்டுக் கொன்ற முக்கிய குற்றவாளியான கேஸ்டில்லோ என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கேஸ்டில்லோவுக்கு நேற்று விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெக்சாஸ் மாகாணத்தில் இந்த வருடத்தில் மட்டும் 5 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் முதன்முறையாக கேஸ்டில்லோவுக்கு தான் விஷ ஊசி முறையின்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியாவில் மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்த வழக்கில், துப்பாக்கியால் சுடுவது, மின்சாரம் அல்லது விஷ ஊசி செலுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவது சரியாக இருக்காது, தூக்கிலிடுவதே பாதுகாப்பான முறை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடதக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close