அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 19 May, 2018 10:44 am


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் வரை பலியாகியுள்ளனர். 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் கையில் ஏ38 ரிவால்வர் துப்பாக்கியுடன் நுழைந்தான். தொடர்ந்து அவன் சரமாரியாக சுட்டதில் 10 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். இவர்களில் மாணவர்கள் 9 பேரும், ஆசிரியர் ஒருவரும் ஆவார். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close