இளவரசர் ஹாரி - மேகன் மண விழா: ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்படாததன் பின்னணி

Last Modified : 19 May, 2018 12:06 pm

இளவரசர் ஹாரி - மேகன் மார்கெல் திருமண விழாவுக்கு வர அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. 

பிரிட்டன் இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் திருமண விழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று மதியம் கோலாகலமாக நடக்கிறது.  அரசுக் குடும்ப விழாவில் பலதரப்பட்டவர்களும் கலந்துகொள்கின்றனர். 

இது முற்றிலும் பிரிட்டன் அரசுக் குடும்ப விழாவாக நடைபெறுவதால், அரசியல் தலைவர்களை அழைப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை என்று விழாவுக்கான செய்தித் தொடர்பாளார் தெரிவித்துள்ளார்.  அரசியல் விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் வேறு சந்தர்ப்பங்களில் மணமக்களை சந்திப்பார்கள். 

ஆனால் அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு வேறு முக்கிய காரணமும் உண்டு. சில காலங்களுக்கு முன், ட்ரம்ப் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, மறைந்த இளவரசி டையானாவை தான் டேட் செய்து வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். இது பிரிட்டன் அரசுக் குடும்பத்தை கடுமையாக கோபமடைய செய்ததாம். 

ட்ரம்ப், பொதுவாகவே நிகழ்ச்சிகளில் பேசும்போது, 'இவருடன் டேட் செய்தேன்....அவருடன் டேட் செய்தேன்' என்று ஏதேனும் பெண்கள் பெயரை சொல்லுவது வழக்கம். அது அவர் அதிபர் பதவிக்கு வந்த பிறகு அவரையே பாதிப்பதாக ஆகிவிட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close