நோயாளிகளுக்கு தேவையில்லாத சிகிச்சை அளித்து ஜெட் விமானம் வாங்கிய டாக்டர்!

Last Modified : 21 May, 2018 01:02 pm

அமெரிக்காவில் நோயாளிகளுக்குத் தேவையில்லாத சிகிச்சைகளை அளித்தே சம்பாதித்து ஜெட் விமானம் வாங்கிய மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் டெக்சாஸில் மருத்துவராக பணியாற்றியவர் ஜார்ஜ் ஸமோரா-க்வெஸாடா.  இவர், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கீமோ தெரபி உள்ளிட்ட தேவையற்ற சிகிச்சைகளை அளித்ததாகவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், யெலி லில்லி (Eli Lilly) எனும் மருந்து கம்பெனியிடம் பணம் பெற்று அந்த நிறுவனத்தின் அதிக விலை கொண்ட மருந்துகளையே பயன்படுத்த நோயாளிகளுக்கு பரிந்துரைத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.


இவர் இவ்வாறு சம்பாதித்து ஜெட் விமானம், மஸரட்டி கார் (Maserati), வீடுகள் என பல சொத்துகளை குவித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தற்போது விசாரணையில் வைக்கப்பட்டிருக்கும் ஜார்ஜ்  ஸமோராவிடமிருந்து, அவரின் 6 பேர் அமரக் கூடிய எக்லிப்ஸ் 500 பிசினஸ் ஜெட் என்ற தனி விமானம் (Eclipse 500 business jet), மஸரட்டி கிரான்டுரிஸ்மோ கூப் (Maserati Granturismo Coupe) என்ற சொகுசு காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close