சொத்துக்கள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலின் இந்தியாவுக்கு எந்த இடம்?

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 09:28 pm


உலகிலேயே சொத்து மதிப்பு மிகுந்த நாடுகளில் இந்தியா 6வது இடத்தை பெற்றுள்ளது. இத்தகவல் AfrAsia Bank வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 

62 ஆயிரத்து 584 பில்லியன் டாலர் சொத்துகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாகவும் 19 ஆயிரத்து 522 பில்லியன் டாலர் சொத்துகளுடன் ஜப்பான் 2வது இடத்தில் உள்ளதாகவும் அந்த வங்கியின் ஆய்வு கூறுகிறது. சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் 4 மற்றும் 5வது இடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 230 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 6வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்து மதிப்பு அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசுகளின் சொத்துகள் இதில் சேர்க்கப்படவில்லை.

மேலும் இந்தியாவின் ஐந்தாவது ஏழை மாநிலம் தமிழகம் என முந்தைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close