வெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி

Last Modified : 21 May, 2018 01:22 pm

வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் அதன் முக்கிய எதிர்கட்சி புறக்கணித்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 

வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்கட்சி தேர்தலை புறக்கணித்தது. இதையடுத்து, நேற்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் 46.1 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதிபர் தேர்தலில் மீண்டும் மதுரோ வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் அவரது வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.  கடந்த 2013ல், ஹூகோ சாவேசின் மரணத்தை அடுத்து, நிக்கோலஸ் மதுரா அதிபராக பதவி ஏற்றார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அவர் 6வது முறை வெனிசுலா அதிபராகிறார். 

ஆனால் இந்த வெற்றி குறித்து கடுமையான விமர்சனமும் எழுந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close