வெனிசுலா மீது புதிய பொருளாதார தடை: அமெரிக்கா அறிவிப்பு

Last Modified : 23 May, 2018 12:03 am

வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வென்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுபோது, "வெனிசுலா அதிபர் தேர்தல் போலியான ஒன்று. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் அது நடைபெறவில்லை. முறைகேடாக நடைபெற்ற இந்த தேர்தல், வெனிசுலாவின் புனிதமிக்க ஜனநாயக கலாச்சாரத்தை தகர்த்துள்ளது. 

முறைகேடான இந்த தேர்தலை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்த தேர்தல் அரசியலமைப்பின் ஒழுங்கை குலைப்பதாக உள்ளது. " என்றார். 

இதணைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவிலிருந்து வெனிசுலாவுக்கான பொருளாதார பரிவர்த்தனைகள் மற்றும் இதர ஒப்பந்தங்களுக்கும் தடை விதித்து வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்துள்ளார். 

அமெரிக்க நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான வெனிசுலா அரசின் பங்குகள், விற்பனை, பரிமாற்றங்கள், போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close