ட்ரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பு ரத்து!

  SRK   | Last Modified : 25 May, 2018 04:32 am


வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்தவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களை வடகொரியா கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், சிங்கப்பூரில் ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டனர். ஆனால்,  சமீபத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யபட்டுள்ளது. முன்னதாக தென் கொரியாவுடன் அமெரிக்க நடத்தவிருந்த ராணுவ பயிற்சிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என வடகொரியா வலியுறுத்தியது. ஆனால், அமெரிக்கா அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து, "அணு ஆயுதங்களை தாங்கள் விட்டுத்தர வேண்டும் என்றால், அமெரிக்கா தனது படைகளை கொரிய தீபகற்பத்தில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டும், இல்லையென்றால் பேச்சுவார்த்தைக்கு இடமே கிடையாது" என வடகொரியா கூறியது. 

அதன்பின், ட்ரம்ப் தரப்பில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர், வடகொரியா, அணு ஆயுதங்களை விட்டுத்தரவில்லை என்றால், போர் மூளும் என எச்சரித்தார். அதை அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் பிரதிபலித்தார். இதைத் தொடர்ந்து கடுப்பான வடகொரியா, அமெரிக்க துணை அதிபரை ஒரு அரசியல் பொம்மை என விமர்சித்தது. இதையடுத்து, சிங்கப்பூரில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"மிகப்பெயரை வாய்ப்பை நீங்கள் இழந்துவிட்டீர்கள். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விரும்பினால் என்னை அழைக்க தயங்க வேண்டாம்" என ட்ரம்ப் தனது கடிதத்தில் கிம் ஜோங் உன்னிடம் கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close