'ஹேண்ட்சம்' என்று கூறியதால் காலியான பெண்ணின் வேலை

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 04:16 pm

லைவ் நிகழ்ச்சியில் சக ஊழியரை ஹேண்ட்சம் என்று கூறிய தொகுப்பாளரை தொலைக்காட்சி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கி உள்ளது.

குவைத் நாட்டில் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக பஷிமா ஷம்மர் என்ற பெண் பணியாற்றி வந்தார். இவர் நேரலை நிகழ்ச்சி ஒன்றை சில தினங்களுக்கு முன் தொகுத்து வழங்கி உள்ளார். அந்த நிகழ்ச்சியில் தனது சக ஊழியரும், செய்தியாளருமான நவாப் அல் ஷாரக்கை, நேரலையில் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டுக் கொண்டு இருந்தார்.

பெண் தொகுப்பாளர் நேரலையில் பேசியதற்கு அந்நாட்டினர் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த போதே பலர் தொலைக்காட்சிக்கு தொடர்பு கொண்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லைவ்வில் வெளியே இருந்து தகவல் கூறி கொண்டு இருந்த நவாப் அல் ஷாரக் தனது தலைப்பாகையை சரி செய்துள்ளார். அப்போது, ''அதனை சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஹேண்ட்சமாக தான் இருக்கிறீர்கள்" என்று பஷிமா கூறியுள்ளார். 

இதையடுத்து அந்த பஷிமாவை தொலைக்காட்சி நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இதற்கு உலகளவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close