கனடாவில் இந்திய உணவகத்தில் குண்டுவெடிப்பு : 18 பேர் காயம்

  Padmapriya   | Last Modified : 26 May, 2018 11:57 am

கனடாவில் இந்தியருக்கு சொந்தமான உணவகத்தில், சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 18 பேர் காயமடைந்தனர்.

கனடாவின் ஆன்டரியோ நகரில் உள்ள, இந்தியருக்கு சொந்தமான பாம்பே பெல் என்ற உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததாக செய்திகள் வெளியாகின. இதில் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அங்குள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான 2 நபர்கள் குறித்து சந்தேகம் எழுப்பி விசாரித்தனர். இதனிடையே வெடித்தது சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு என்று தெரியவந்துள்ளது. 

இதே போல, கனடாவில் டொரான்டோவில் கடந்த மாதம், உணவகத்தில் வேன் ஒன்றை மோதச் செய்து 10 பேர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close