ஐ.நா. அமைதிப்படையில் உயிர் தியாகம் செய்வதில் இந்தியர்கள் முதலிடம்!

  Padmapriya   | Last Modified : 01 Jun, 2018 05:48 pm
india-lost-highest-number-of-personnel-in-united-nations-peacekeeping-missions

ஐ.நா-வின் உலகளவிலான அமைதிப்படை செயல்பாடுகளில் உயிர் தியாகம் செய்தவர்களில் இந்தியர்கள் முதலிடம் வகிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஐ.நா. அமைதிப்படை 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த படைக்கு அதிகப்படியான வீரர்களை அனுப்பி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்திய வீரர்கள் 6,693 பேர் அபேய், சிப்ரஸ், காங்கோ, ஹைதி, லெபனான், தெற்கு சூடான், மேற்கு சஹாரா ஆகிய இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது 96,000 இந்திய வீரர்கள் ஐ.நா. அமைதிப்படையில் பணி செய்கின்றனர். மொத்தம் 15,000 அதிகாரிகளும், 1,600 தன்னார்வலர்களும் சேவையாற்றும் அமைதிப்படையின் 70-வது ஆண்டு தினம் விரைவில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி போர்களில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்திய ராணுவம், காவல் துறை மற்றும் பிற அதிகாரிகளைச் சேர்த்து இதுவரை 163 பேர் ஐ.நா. அமைதிப்படையில் பணிசெய்த போது வீர மரணம் அடைந்துள்ளனர். அமைதிப்படையில் உயிர் தியாகம் செய்தவர்களில் இந்தியாவே இது முதலிடத்தில் உள்ளது. 

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறும்போது, "ஐ.நா. அமைதிப்படையில் சேவையாற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எண்ணிலடங்காத உயிர்களை காப்பாற்றியுள்ளனர். வீரமரணமடைந்த 3,700 வீரர்களையும் நாங்கள் கவுரவிக்கிறோம்"என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close