அமெரிக்க 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் தொடர்ந்து சாதிக்கும் இந்திய வம்சாவளியினர்

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2018 07:41 am
us-national-spelling-bee-has-a-surprise-winner

ஆங்கிலச் சொற்களுக்கு எழுத்துகளை ஒப்புவிக்கும் அமெரிக்காவின் பிரபல 'ஸ்பெல்லிங் பீ'  போட்டியில் 14 வயது இந்திய வம்சாவளிச் சிறுவன் கார்த்திக் நெம்மனி வெற்றி பெற்றார்.

அமெரிக்காவில் 'ஸ்கிரிப்ஸ் ஸ்பெல்லிங் பீ ' என்ற பெயரில் ஆங்கிலச் சொற்களுக்கான தேசிய அளவிலான ஸ்பெல்லிங் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான 91-வது 'ஸ்பெல்லிங் பீ ' போட்டி மேரிலாந்தில் நடந்தது. இதில் 516 பேர் பங்கேற்றனர். 9 சிறுமிகள், 7 சிறுவர்கள் என 16 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

இவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்திக் நெம்மனி, நயசா மோடி ஆகிய 2 சிறுவர்கள் இறுதி சுற்றில் மோதினர். இதில் ‘koinonia’ என்ற வார்த்தைக்கு சரியான ஸ்பெல்லிங் சொல்லி கார்த்திக் வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெற்றது குறித்து கார்த்திக் கூறும்போது, ''எனக்கு நம்பிக்கை இருந்தது. என்றாலும் இது உண்மையில் நிகழும் என எதிர்பார்க்கவில்லை'' என்றார். 

உலகப் புகழ்பெற்ற இந்தப் போட்டியில் சமீப காலமாக இந்திய வம்சாவளி சிறுவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு அனன்யா வினய் என்ற அமெரிக்க இந்திய சிறுமி வெற்றி பெற்றார். இந்த நிலையில் தொடர்ந்து 11-வது முறையாக தெற்காசிய மாணவர் இந்தப் போட்டியில் வென்றுள்ளார்.

டெக்சாஸ் மாநிலம், மெக்கின்னி நகரை சேர்ந்த கார்த்திக், 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு பரிசுக்கோப்பையுடன் 40 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இத்துடன் மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம் சார்பில் 2,500 டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close