அமெரிக்காவில் கடும் டிராஃபிக்கில் ரிவர்சில் சென்ற கார்; வைரல் வீடியோ!

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 04:36 pm
car-driving-backwards-on-america-s-busy-ohio-highway

ஹொகையோ பகுதியில் டிராஃபிக் அதிகமாக இருக்கும் சாலையில் ஒரு கார் ரிவர்சில் நீண்ட தூரம் செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் ஹொகையோ பகுதி எப்போதும் டிராஃபிக் அதிகமாக இருக்கும் இடமாகும். இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவியில் கடந்த செவ்வாய் கிழமை காலை 6.45 மணிக்கு பதிவான காட்சிகள் டிராஃபிக் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

அதில் வெள்ளை கார் ஒன்று கடுமையான டிராஃபிக்கில் இருந்து ரிவர்சில் அருகில் இருக்கும் மற்றோரு சாலைக்குள் செல்கிறது. வேகமாக அந்த சாலையை கடக்கும் கார் ரிவர்சிலேயே யு-டர்ன் எடுத்து மற்றொரு சாலை வழியாக செல்கிறது. தொடர்ந்து அந்த கேமராவில் பதிவாகி உள்ள நேரம் வரை அந்த கார் ரிவர்சிலேயே சென்றுள்ளது. 

ஹொகையோ போக்குவரத்து துறை இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறது. மேலும் அந்த வாகனத்தில் ஏதாவது மெக்கானிக்கல் குறைபாடு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. படங்களில் வரும் காட்சி போல இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வீடியோவை பார்க்க: https://youtu.be/RGzjWREabMY

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close