வடகொரிய அதிபரை அமெரிக்காவுக்கு அழைப்பேன்: டிரம்ப்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 04:24 pm
trump-kim-summit-if-this-meet-finished-successfully-i-will-invite-kim-to-america-says-trump

வடகொரிய அதிபருடனான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், அவரை அமெரிக்காவுக்கு அழைப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

உலக வரலாற்றிலேயே முக்கிய நிகழ்வாக கருதப்படும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு வருகிற ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருக்கிறது.  இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் செண்டோசா தீவில் உள்ள புகழ்பெற்ற கேபெல்லா ஹோட்டலில் உள்ளூர் நேரப்படி சரியாக காலை 9 மணிக்கு சந்திக்க இருக்கின்றனர். முன்னதாக இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், திட்டமிட்டபடி வடகொரிய அதிபரை சந்திப்பேன் என டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதையடுத்து வடகொரிய பிரதிநிதிகளும் இதனை உறுதி செய்தனர். இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு நடைபெறுவதையொட்டி, சிங்கப்பூரில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து சீன அதிபர் ஷின்சோ அபே, அமெரிக்காவில் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பினை அடுத்து, டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த சந்திப்பு சமூகமாக முடியும் என்று நம்புகிறேன். இதன்மூலமாக கொரியப்போர் முடிவுக்கு வரும். அணு ஆயுத சோதனையை வடகொரியா முழுவதுமாக கைவிட சிறிது காலம் ஆகும். முதற்கட்டமாக அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக இந்த பேச்சுவார்த்தை இருக்கும் என நினைக்கிறன் வடகொரிய அதிபருடனான இந்த சந்திப்பு வெற்றி பெறும் பட்சத்தில், அவரை அமெரிக்காவுக்கு அழைப்பேன்" என தெரிவித்தார். 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close