இந்தியாவுடனான வர்த்தகம் நிறுத்தப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 03:04 am
trump-targets-india-threatens-to-stop-trade

உலக நாடுகள் அமெரிக்காவை மிக மோசமாக நடத்துவதாக கூறி, வெளிநாட்டு இறக்குமதிகள் மீது புதிய வரிகளை சுமத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அடுத்ததாக இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தவுள்ளதாக எச்சரித்துள்ளார். 

அமெரிக்க பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிக வரி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ட்ரம்ப், வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது புதிய வரிகளை விதித்தார். இது சர்வதேச நாடுகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நடந்துமுடிந்த ஜி7 மாநாட்டில், ட்ரம்ப்பின் வரிகளை கனடா அதிபர் ட்ருடோ கடுமையாக விமர்சித்தார். அதற்கு ட்விட்டரில் ட்ரம்ப் "ட்ருடோ நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக" பதிலடி கொடுத்தார். பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்களும் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை விமர்சித்தனர். 

இந்நிலையில், ட்ரம்ப் தனது கவனத்தை இந்தியா பக்கம் திரும்பியுள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், அது நீக்கப்படாவிட்டால், இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

அமெரிக்காவுடனான இந்திய வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து அவரும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close