கிம் ஜோங் உன் அமெரிக்காவுக்கு செல்கிறாரா?

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 04:05 pm
kim-jong-un-accepts-donald-trump-s-invitation-to-visit-the-us-state-media-reports

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், டிரம்ப்பின் அழைப்பினை ஏற்று அமெரிக்கா செல்ல இருப்பதாக கொரிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு கடந்த ஜூன் 12ல் சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள புகழ்பெற்ற கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்றது. வந்தவுடன் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொண்ட இரு நாட்டு அதிபர்களும் அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சந்திப்பு முடிந்ததும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகவும் திருப்தியாக இருந்தது என தெரிவித்தார். அதேபோல் அணுஆயுத சோதனையை கைவிட முயற்சியைத் தொடங்குகிறோம் என வடகொரிய அதிபரும் தெரிவித்தார். இதையடுத்து, வடகொரிய அதிபரை டிரம்ப் அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பினை ஏற்று கிம் ஜோங் அமெரிக்கா செல்ல இருப்பதாக அந்நாட்டின் ஒரு சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் கிம் ஜோங் முன்னதாக எந்த நாடுகளுக்கும் சென்றதில்லை. முதல்முறையாக சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த அவர், அதையடுத்து தென் கொரிய அதிபரை சந்தித்து பேசினார். தற்போது அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த சந்திப்பினால் கிம் ஜோங் அமெரிக்கா செல்ல வாய்ப்பிருப்பதாக தான் பலரது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close