ஜப்பான் பிரதமருக்கு மறைமுக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்!

  Padmapriya   | Last Modified : 17 Jun, 2018 11:09 am
trump-to-abe-i-can-send-you-25-million-mexicans

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள மெக்சிகோ நாட்டினரை, ஜப்பானுக்கு அனுப்பி விடுவேன்'' என, ஜப்பான் பிரதமர், ஷின்சோ அபேக்கு, அமெரிக்க அதிபர், டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் தொடர்பான பிரச்னை டிரம்ப் பதவி ஏற்றபிறகு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து வாஷிங்டனில், அதிபர் ட்ரம்ப் கூறும்போது, "பிறநாட்டு மக்கள் குடியேறுவதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல பிரச்னையை சந்தித்து வருகின்றன. 

இதை உணராத ஜப்பான் போன்ற நாடுகள், அகதிகளாக வரும் மக்களை ஏற்க வேண்டும் என எங்களுக்கு அறிவுரை கூறுகின்றன. இது, எவ்வளவு பெரிய சுமையை ஏற்படுத்தும் என அவர்கள் உணர மறுக்கின்றன. அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள, 2.5 கோடி மெக்சிகோ அகதிகளை, ஜப்பானுக்கு அனுப்புகிறோம். இதை, ஜப்பான் எப்படி சமாளிக்கிறது என பார்க்கலாம். அந்த சூழ்நிலையில், ஷின்சோ அபே, பதவியை துறந்து விடுவார். அறையில் இருந்தபடி என்ன வேண்டுமானாலும் பேசக்கூடாது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருபவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எல்லையில் சுவர் கட்ட மெக்சிகோ பணம் தர வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மெக்சிகோவை எச்சரித்தார்.  இதற்குப் பதிலளிக்கும் வகையில் மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ, மதில் சுவர் கட்டுவதற்கு மெக்சிகோ இப்போது மட்டுமல்ல, எப்போதும் பணம் தராது எனக் குறிப்பிட்டுருந்தார். 

சமீபத்தில் வட அமெரிக்க நாடான, கனடாவில், சமீபத்தில், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் உள்ளடக்கிய, ஜி - 7 உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு, கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த, அமெரிக்க அதிபர், ட்ரம்ப், ஜி - 7 மாநாட்டில் வழங்கப்பட்ட கூட்டறிக்கைக்கான ஆதரவை திரும்ப பெற்றார். அதோடு, ட்ரூடோவையும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக ஊடகங்கள் எழுதியபோது. ஊடங்கள் மீது டிரம்ப் பாய்ந்து குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close