குடியேறிகளிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவு: திரும்ப பெற்றார் ட்ரம்ப் 

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 07:02 pm
trump-ends-his-policy-of-family-separations-with-executive-order

அமெரிக்காவில் குடியேறிகளை கைது செய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வெவ்வேறு இடத்தில் அடைத்து வைக்குமாறு ட்ரம்ப் விதித்த உத்தரவு திரும்ப பெறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மெக்சிகோ எல்லைவழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் மக்களை கைதுசெய்யும் போது பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனியாக இடத்தில் வைக்கப்படுவது குறித்த ட்ரம்பின் கொள்கைக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்தது. அவரது மனைவி மெலினியா ட்ரம்பும் இந்த விவகாரத்தை கடுமையாக எதிர்த்தார். அதேபோல ட்ரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் எதிர்த்தனர். 

அதன்படி கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை பெற்றோரிடம் பிரிக்கப்பட்டு சுமார் 2342 குழந்தைகள் தனி இடத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான புதிய உத்தரவில் ட்ரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டதாகவும். புதிய உத்தரவின்படி ''குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகிய இருதரப்பும் ஓரிடத்தில் வைக்கப்படுவர்'' என்று தெரிவித்தார்.

இருப்பினும் இந்த உத்தரவு எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்று எந்த முடிவும் ‎அறிவிக்கப்படவில்லை. 

''பெற்றோரை பிரிந்து குழந்தைகள் தனியாக அடைத்து வைக்கப்படும் காட்சியை எனக்கு காண பிடிக்கவில்லை'' என்று குறிப்பிட்ட அவர், ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வரும் யாரையும் சட்டப்படி தண்டிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனது நிர்வாகம் எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close