சேகுவேரா உடை, கம்யூனிச வாசகம் அணிந்த அமெரிக்க வீரர் பணி நீக்கம்

  Padmapriya   | Last Modified : 21 Jun, 2018 09:50 pm
commie-cadet-who-wore-che-guevara-t-shirt-kicked-out-of-us-army

அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் சேகுவேரா உடை அணிந்ததற்காகவும், கம்யூனிசம் வெல்லும் என்று தனது ராணுவத் தொப்பியில் எழுதியதற்காகவும் ராணுவத்திருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் வெஸ்ட் பாய்ண்ட் ராணுவப் பயிற்சி மையத்தில் ஸ்பென்சர் ரபோன் (26) கடந்த 2016 ஆம் ஆண்டு தனது பயிற்சியை முடித்திருக்கிறார். அப்போது பட்டமளிப்பு விழாவில் புரட்சியாளர் சேகுவேரா உருவம் இருந்த உடையை ராணுவ உடுப்புக்கு உள்ளே அணிந்தும்,  தனக்கு அளிக்கப்பட்ட தொப்பியில் கம்யூனிசம் வெல்லும் என்று எழுதப்பட்ட வாசகம் இருப்பதாக புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் அவர் தனது டிவிட்டரில் பதிவேற்றம் செய்ய இந்தப் படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து ஸ்பென்சர் ரபோன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் செவ்வாயன்று விசாரணை முடிந்ததாக அறிவித்துள்ள அமெரிக்க அரசு, ஸ்பென்சர் ரபோனை ராணுவத்திலிருந்து நீக்கியுள்ளது.

மேலும் இந்த விசாரணை தொடர்பாக கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது என்றும் ராணுவத தரப்பு தெரிவித்துள்ளது. 

இதனிடையே, ரபோன் பணி தான் நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல், அமெரிக்க ராணுவ அலுவலகத்தின் முன் நின்று, கடைசி குட்  பை என்று புகைப்படம் எடுத்து அதனையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுருக்கிறார்.

அதோடு, இந்த ஸ்பென்சர் ரபோன் சிகாகோவில் நடைபெறவுள்ள சோசியலிசம் 2018 மாநாட்டில் உரையாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட ஸ்பென்சர் ரபோனுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close