வடகொரியாவால் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2018 01:38 pm
trump-says-north-korea-still-extraordinary-threat

கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய மூலப் பொருட்கள் இருப்பதாகவும் அதனால் அச்சுறுத்தல் நீடிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ட்ரம்ப் இது தொடர்பாக அனுப்பியுள்ள பிரகடனத்தில், கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதங்களில் பயன்படுத்த தக்க அணுசக்தி மூலப்பொருட்களின் இருப்பும், வடகொரிய அரசின் கொள்கைகளால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும், பொருளாதாரத்துக்கும் வெளியுறவு கொள்கைக்கும் அசாதாரண அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 12ம் தேதி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பிறகு அமெரிக்கா திரும்பியவுடன், வடகொரியாவில் இருந்து இனி அணுஆயுத அச்சுறுத்தலும் இல்லை, இரவில் நன்றாக தூங்குங்கள் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில், அணுஆயுத ஒழிப்பை வடகொரியா ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். 

இதனை அடுத்து தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ராணுவ பயிற்சிகளை ரத்து செய்வதாக பென்டகன் அறிவித்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close