'ட்ரம்ப் உடனான உறவை அம்பலபடுத்துவேன்' - ஆபாச பட நடிகை அதிரடி

  PADMA PRIYA   | Last Modified : 13 Mar, 2018 05:46 pm

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதிபராவதற்கு முன்பு பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில், ஆபாச வீடியோ, படங்களில் நடிக்கும் ஸ்டார்மி டேனியல்ஸின் என்ற போர்னோ நடிகையுடன் அதிபர் ட்ரம்புக்கு இருந்த தொடர்புகள் மற்றும் அதை மறைக்க ட்ரம்ப் பணம் கொடுத்த விவகாரம் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். இவருக்கும் அதிபர் ட்ரம்புக்கும் இடையே ரகசிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று தன்னுடைய சொந்த பணம் 130,000 டாலர்களை ஸ்டார்மிக்கு கொடுத்ததாக ட்ரம்ப் வழக்கறிஞர் கடந்த மாதம் தெரிவித்திருந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அந்த பணத்தை திரும்பத் தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள ஸ்டார்மி, அதிபர் உடனான உறவை அம்பலப்படுத்துவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, இந்த விவகாரத்தை ஸ்டார்மி வெளியே சொல்லாமல் இருக்க இருவருக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, இவருக்கு 1,30,000 அமெரிக்க டாலர்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பான ஹுஷ் ஒப்பந்தம் (Hush agreement) சமீபத்தில் வெளியாகின. இதைத் தொடர்ந்து, தனக்குக் கொடுக்கப்பட்ட பணத்தைத் திரும்ப ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக நடிகை ஸ்டார்மி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் வழக்கறிஞர் மைக்கேல் கோஹெனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து நடிகையின் வழக்கறிஞர் கூறுகையில், "ஸ்டார்மியின் கோரிக்கையை அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது வழக்கறிஞா கோஹன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஸ்டார்மி தன் பக்க நியாயத்தைத் தெரிவிக்க முடியும். யார் உண்மையைக் கூறுகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் முடிவு செய்யட்டும்" என்று கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகை மறுப்பு: நடிகை ஸ்டார்மியின் இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ட்ரம்ப் அல்லது அவரது நிறுவனத்துக்குத் தொடர்புடையவர்களோ எந்த நடிகைக்கும் 130,000 டாலர்களைக் கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை நடிகை ஸ்டார்மி மறுத்துள்ளார். பணம் கொடுத்தது தேர்தல் பிரசார விதிமுறைகளை மீறிய செயல் என்று தேர்தல் ஆணையத்துக்கும், நீதித்துறைக்கும் புகார் மனுவை அனுப்பியுள்ளார். மேலும், இருவருக்கும் இடையேயான உறவை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன் என்று சபதம் போட்டுள்ளார். ஏற்கனவே, பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் ட்ரம்புக்கு ஸ்டார்மி தலைவலியாக மாறிவிட்டார் என்கின்றன அமெரிக்கப் பத்திரிகைகள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close